பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 21 தாய்க்குலமே! உன்பதுமத் தாள்பணிந்தேன்; உன்வளர்ப்பில் வாய்த்திருக்க வேண்டுமினி வளமான புதுவீரம் கண்ணகியின் வழிவழியாய்க் கற்புத் திறன்காணும் பெண்இனமே! என்னினத்தின் பெருமையெல்லாம் உன்னிடத்தில்! மீனக் கொடியோன் வியன் நகரில் புதுவாழ்வைக் காணக் கருதியொரு காற்சிலம்பை விற்றுவரப் போனான், வருவான் பொழுது புலருமெனத் தேனை நினைவோடு தேக்கிக் கொண்டிருந்த மகள் குடிகெடுத்த அவலத்தைக் கூறிடக் கேட்டதுமே கடுகடுக்கும் முகத்தோடும் கனல்தெறிக்கும் கண்ணோடும் படபடக்கும் நெஞ்சோடும் பதைபதைக்கும் மூச்சோடும் இடிஇடிக்கும் புயல்மேகம் எழுந்ததைப்போல் அண்டங் கிடுகிடுக்க வந்தாள்; மெய்க் கீர்த்திமிக்க பாண்டியனைத் துடிதுடிக்க வைத்தாள்; துணைவன் பழிதுடைத்தாள்!