பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்பு so * கறுப்புநிற மீசையினை வேங்கை மார்பன் கரிகாலன் போல்வைத்தாய்; ஞானச் செல்வம் திருக்குறளை இதயத்தில் வைத்தாய்; தூய தேனகையைக் கனிமொழியை இதழில் வைத்தாய்; அரிமாவின் வீரத்தைத் தன்மா னத்தை அப்படியே உன்விழியில் வைத்தாய்; பச்சை மருக்கொழுந்துத் தமிழை உன் உயிரில் வைத்தாய்; மணிக்கவிதை முடியரசே வணங்கு கின்றேன். மரைச்சாமி மலைச்சாமி தன்னு டம்பில் மங்கைக்கோர் இடம்தந்த சாமி ஆற்றங் கரைச்சாமி சேலைகவர் கண்ணன்சாமி கையினிலே வாள்பிடித்த சாமி இன்னும் தரைச்சாமி எவ்வளவோ இருந்தும் நானோ தமிழ்ச்சாமி என்றால் தான் வணக்கம் செய்வேன்! துரைசாமி என்சாமி! இந்நூற் றாண்டின் தொல்காப்பி யச்சாமி! வணங்கு கின்றேன். 'மரை-தாமரை என்பதன் முதற்குறை 女 。。 * 臀 够 மன்றத்தலைவர் - உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/27&oldid=883026" இலிருந்து மீள்விக்கப்பட்டது