பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 27 வண்ணங்கள் தொட்டெழுதி ஒவியங்கள் வரையவந்த தூவிகளே இங்கர் சால்போல் எண்ணங்கள் ஈட்டிகளாய்த் தீட்டி நீட்டும் எழுத்தாளப் பாசறையே நீதி காத்த மண், எங்கள் மண் என்று பெருமை பேசும் மாமதுரைச் சான்றோரே வணங்கு கின்றேன். வண்ணத்துள் வண்ணமெனத் திகழ்க றுப்பு வண்ணத்தைப் பர்ட்டாக்கி வழங்கு கின்றேன். கறுப்புநிறம் வண்டுநிறம்; எனினும் வண்டைக் கவின் மலர்கள் காதலிக்கா திருப்பதுண்டா? கறுப்புநிறம் காக்கைநிறம்; எனினும் அந்தக் காக்கையின வாழ்க்கைக்கோர் ஈடு உண்டா? கறுப்புநிறம் தான்களிறும்; எனினும் அந்தக் களிறுதரும் தந்தத்திற் கிணையும் உண்டா? கறுப்புநிறம் என்றால்பின் தேவையற்ற கசப்பெதற்கு? வெறுப்பெதற்கு? விளங்க வில்லை. கறுப்புத்தான் கார்மேகம்: அந்த மேகக் காணிக்கைத் தண்ணிரை மறுக்கின் றோமா? கறுப்புத்தான் குயில்; கூவு கின்ற போது காதுக்குக் கைக்கதவா போடு கின்றோம்? கறுப்புத்தான் கடல் கூட. ஆனால் அந்தக் - கடல் முத்தைச் சொத்தையென்றா வீசு கின்றோம்? கறுப்புத்தான் ஏருழவர்மேனி, அந்தக் காராளர் கைவிட்டால் செந்நெல் ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/28&oldid=883028" இலிருந்து மீள்விக்கப்பட்டது