பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் 8, 28 மான்வேண்டும் எனப்பெண்மான் கேட்க, மாய மான் பின்னால் போனானே - அந்த ராமன் தான் என்ன நிறமென்று நினைக்கின்றீர்கள்? தார் போன்ற கறுப்புநிறம் அந்தோ னிக்குத் தேன்போல இனித்தாளே எகிப்து தேசத் திருமங்கை அவள் நல்ல கறுப்புத் தானே தான் தோன்றித் தலைவர்முன் எதிர்ப்பைக் காட்டத் தயங்காமல் காட்டுங் கொடி கறுப்புத் தானே! செகம்புகழும் நாடகங்கள் செய்துதந்த செகப்பிரியன் மிகப்பிரியம் வைக்கும் வண்ணம் அகம்பறித்த காதலியின் வண்ணம் கூட அழகான கறுப்புத்தான் என்வே வெற்றி முகங்காட்ட வேண்டுமென்று விரும்பு கின்ற முன்னேற்ற எழுத்தாள ரெல்லாம் இன்றே தகதகக்கும் கறுப்புநிறப் பெண் கழுத்தில் தாலிகட்டிப் புகழ்தட்டிக் கொள்ள வேண்டும். மதுமதிபோல் முகங்கொண்ட மங்கை அந்தி மாலையிலே சோலையிலே நடக்கும் போது மதுஉண்டு மண்கிடந்த வண்டை நாவல் மரம் உதிர்த்த பழம்என்று நினைத்துக் கையால் அதிவேக மாய் எடுத்தாள்; உற்றுப் பார்த்தாள்; அரைநொடியில் பறந்துவண்டு செல்லக் கண்டே அதிசயித்தாள், பழம் பறப்பதுண்டா என்றே அவள் மயங்கச் செய்ததெது? கறுப்பு வண்ணம்’ 'எகிப்து தேசத்திருமங்கை-அந்தோனி(Antony)யின் காதற் கிளி கிளியோ பாத்ரா (Cleopatra) ★ 〜・ * g & - இப்பகுதி ஒருபழம் பாடற கருததைத் தழுவியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/29&oldid=883030" இலிருந்து மீள்விக்கப்பட்டது