பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 29 எத்திக்கும் புகழ்மணக்கும் இலக்கி யங்கள் ஏராள மாய்த்தந்த தமிழை மேலும் தித்திக்க வைத்திருந்த ஒளவை யாரைத் திடமாக நெடுங்காலம் வாழும் வண்ணம் வைத்ததெது? கொடையழகன் தகடுர் வேந்தன் வழங்கியது....! மூதாட்டி ஒளவை அன்று கத்தியெடுத் தறுக்காமல் உண்ட அந்தக் கனிவண்ணம் என்ன வண்ணம்? கறுப்பு வண்ணம். முற்றாத மாந்தளிரன் உடலும் வண்டு மொய்க்காத முல்லைப்பூப் பல்லும் கொண்ட குற்றாலக் குறவஞ்சி பிரிவால் வெந்த குறவன்தன் காதலியின் அடையாளத்தைச் சுற்றாமல் வளைக்காமல் நண்பனுக்குச் சுருக்கமாய்ச் சொன்னானாம்; என்ன சொன்னான்? கற்றாரைப் போலெங்கும் திரியும் வஞ்சி 'கறுப்பினிலே அழகி என்றான்; கம்பன் தோற்றான்." + கொடுக்கப்பட்ட கருநெல்லிக் கனியையுண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தார். (புறம் - 91) ஒளவையார், அதியமான் நெடுமான் அஞ்சியால் jor இராமன், அனுமனிடம் சீதையின் அங்கஅடையாளங்களைப் பாதாதி கேசமுறையிற் கூறுவதாகக் கம்பன் பாடிய பாடல்கள் பல. அவ்வாறன்றிக்குறவஞ்சியின்அடையாளத்தைக் குறவன் "கறுப்பில் அழகியடா’ என்று தன் தோழனுக்குச் சுருக்கிச் சொல்வதாகப் பாடிவிடுகிறான், திரிகூட ராசப்பன்- குற்றாலக் குறவஞ்சியில். எனவே கம்பன் தோற்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/30&oldid=883034" இலிருந்து மீள்விக்கப்பட்டது