பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 30 இருமோகக் கருநாகம்புணர்ந்து பின்னி இணைவதுபோல் தெரிகின்ற உன்றன் கூந்தல் திருக்கோலம் என்னென்பேன் கண்ணே என்று தினம் ஆண்கள் பெண்துணையைப் புகழுவார்கள்; அருகிருந்து கூந்தலினைக் கோது வார்கள்; அது - கறுப்பே என்பதனால் மாறி வெள்ளை உருவெடுத்து விடுமானால் பின்னர் தேடி ஒரு பயல்தான் வருவானா? வருணிப் பானா? மலர்வண்ணம் பலவண்ண மானால் என்ன? மர இலைகள் பச்சைநிற மானால் என்ன? சிலர்வண்ணம் சிவப்பாக இருந்தால் என்ன? சிந்தனைகள் அழுக்கடைந்த கார ணத்தால் 'புலையர்கள் கறுப்பர்கள் என்று தீமை புரிகின்றோர் நிறம்வெள்ளை யானால் என்ன? உலகத்தில் நிழல்வண்ணம் எதற்கும் யார்க்கும் ஒன்றன்றோ! உண்மையிலே கறுப்பே யன்றோ? பச்சைநிறச் சேலையினைக் கட்டிக் கோவைப் பழச்சிவப்பாம் இதழில் நகை காட்டி, நெஞ்சில் நிச்சயித்த எதிர்கால மனைவி வந்தாள் நேற்றிரவு.... கனவில்தான்.... வந்தே 'அத்தான் கொச்சிமஞ்சள் பூசியுள்ள முகம்விளக்கங் கொள்ளப்பொட்டிடுக"வென்றாள். கறுப்புப் பொட்டைக் கச்சிதமாய் இட்டேன் நான். அதனைக் கண்டு கண்டுவந்து கவிபொழிந்தேன்; வரட்டுமா, நான்?

శ్మి• f இவை பிற கவிஞர்களால் பாடப்பட்ட வண்ணங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/31&oldid=883036" இலிருந்து மீள்விக்கப்பட்டது