பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதுநகர் 'வாழுமெனை மருதம் புகல்என்று விருதுநகர் அழைத்தீர்கள்; விந்தையினை என்னென்பேன்! தஞ்சைநகர்ப்பிறந்த தமிழர் எவரேனும் நஞ்சை வளங்கொழிக்கும் நல்ல மருதத்தைப் பாடிப் பசுந்தேனைப் பாய்ச்சுதற்கு வந்திருந்தால் கூடியதைக் கேட்பதிலே கொள்ளைப் பொருளிருக்கும். கொடிக்கம்பம் தவிர, பயிர்க் குலம் அதிகம் நட்டுவைக்க முடியாத சீமையிலே முகிழ்த்த எனை அழைத்து மருதத்தைப் பாடென்றால் மயக்கம் தோன் றாதா? பெரிதாக அச்சம் பிறக்காதா? ஆனாலும் காலைவைத் தால், வெங் கனலாய்க் கொதிக்கின்ற பாலைத் திணையளித்துப் பதை பதைக்க வைக்காமல் f மருதுபாண்டியர் ஆண்ட சிவகங்கை. மீரா 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/34&oldid=883044" இலிருந்து மீள்விக்கப்பட்டது