பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் 8. 36 பெண் மக்கள், பரிதி பிறக்கும்முன் விழித்தெழுந்து குளித்துத் திருநுதலில் குங்குமப் பொட்டிட்டுக் களித்துமனை முற்றத்தில் கவின்பானை ஏற்றியதில் முனைமுரியா திருக்கின்ற முல்லைநிற அரிசியிட்டு இனியவெல்லக் கட்டியிட்டுப் பாற்பொங்கல் ஆக்கி வைக்கப் பல்லில்லாக் கிழவர் முதல் பால்மறவாப் பிள்ளைவரை எல்லாரும் கூடி இதயச் செழுமையுடன் சூரியனைப் போற்றிச் சுழல் உலகம் வாழவைக்கும் மாரியினைப் போற்றி மறக்காமல் கம்பனைப்போல் ஏர்போற்றி நன்றியுள்ள எருது களைப்போற்றிப் பார்போற்றிப் பாடுபடும் பயன்கரத்தை மிகப்போற்றிக் கொண்டாடும் தைத்திருநாள் கொடுத்த நிலங்கூட வண்டாடிப் பண்பாடும் வனப்புள்ள மருதம்தான்! f கம்பன், உழவுக்குத் தந்த கவிதைக் காணிக்கை “ஏர் எழுபது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/37&oldid=883049" இலிருந்து மீள்விக்கப்பட்டது