பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uBrm K. 37 ஊடல்என் கின்ற உரிப்பொருளுக் கேற்றதமிழ்ப் பாடல் பிறந்ததிணை பாங்கான மருதம்தான். கோவலன்வாழ் வழிந்ததற்கும் கூடல் நகராண்ட காவலன், சா வேற்றதற்கும் கண்ணகிப்பெண் வானுறையும் தெய்வநிலை பெற்றதற்கும் தென்னர் மறம் பழித்த செய்கை அறிந்தவுடன் சீறி விழிசிவந்து படைதிரட்டிப் புகழ்ச்சேரன் பாய்ந்ததற்கும் வடவேந்தர் மடமையினால் கல்சுமந்து மானம் இழந்ததற்கும் காரணமாய்க் கற்றோர்கள் காண்பதெது? மாதவியாம் ஆரணங்(கு) இசைத்திட்ட அழகான கானல் வரிப்பாடல் தானே, வளமான மருதத்தின் உரிப்பொருளாய் அமைந்ததொரு ஊடற் கதைதானே! + “மாதவிமடந்தை- கானற் பாணிகனக விசயர்தம் முடித்தலை நெரித்தது, - சிலப்பதிகாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/38&oldid=883051" இலிருந்து மீள்விக்கப்பட்டது