பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 38 மாலையிலே காதல் மயக்கம் தலைக்கேறச் சோலையிலே தனியாகச் சுந்தரியாள் ஒருத்திமட்டும் உட்கார்ந் திருந்தாள்; உளத்தினிலே ஏக்கமென்ற முட்பாய, இன்னுமவன் முகங்காட்ட வில்லையென்ற ஆத்திரமோ அதிகரிக்க ஆசை சிறகடிக்க நேத்திரமீன் அங்குமிங்கும் நெளிந்தோடிக் கொண்டிருக்கப் பொற்கொல்லர் இன்றைக்குப் புலம்பித் தவிப்பதைப் போல் நெற்செல்வன் வீட்டுப்பெண் நிலையின்றித் தவிதவித்தாள். எப்படியோ - வெண்திங்கள், எழில்மிக்க மணிசிரிக்கும் ஒப்படிசெய் யாதுள்ள ஒளிவயலைக் காவல்செய வருகின்ற நேரத்தில் - வந்த இளங்குமரன் இருகரத்தால் பூமயிலை இறுக அணைப்பதற்குப் போனான்; அவள் விலகிப் போனாள். தினம்கொம்புத் தேனாகப் பேசியுடல் f தங்கக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டநேரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/39&oldid=883053" இலிருந்து மீள்விக்கப்பட்டது