பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 39 தீண்டுபவள் இன்றுமட்டும் ஊமைக் குயிலானாள் ஏன், என்றுளஞ்சோர்ந்து "தீமை எதுபுரிந்தேன்? திரும்பிப்பார் பிளந்திருக்கும் மாவடுவைப் போன்ற மணிவிழியே இதயத்தில் மாவடுவை உண்டாக்கி மாய்க்காதே’ எனக்கூறி நெருங்கி அமர்ந்தான்; நிலாமுகத்தை முத்தமிட வரங்கேட்டான்; உடனே வனிதை அவன்மார்பில் ஓங்கித் தன் பாதத்தால் உதைத்தாள் நொடிப்பொழுதில் வேங்கை தனைவெல்லும் வீரன்தன் மலைமார்பில் பூப்பாதம் படுமானால் புண்ணாகிப் போமென்று காப்பாற்ற நினைத்துக் கரத்தால் புதைத்துநிற்க, 'ஒஒஒ' அப்படியா..... உன் கள்ளம் அறிவேன்நான் நீ ஒர் புதியவளை நெஞ்சில்வைத் திருக்கின்றாய் அவளுக்கு நல்ல அடிபட்டு விடும்என்ற கவலையினால் தானே கரம்புதைத்தாய்! எனச்சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/40&oldid=883055" இலிருந்து மீள்விக்கப்பட்டது