பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LEgr K. 41 கழுத்தினிலே தங்க நகையுண்டா? நட்டுண்டா? மாற்றி உடுத்த வகையான சேலைதான் வாங்கிக் கொடுத்ததுண்டா? எதிர்வீட்டுப் பார்வதிபோல் இருளப்பன் மனைவியைப்போல் புதிதாய் வரும் படத்தைப் போய்ப்பார்க்க வழியுண்டா? கல்யாண நாள்முதலாய்க் கடுகளவும் சுகம் உண்டா? சொல்லுங்கள் எனமங்கை சோகக் கதை தொடர்ந்தால் . 'ஆர்வத்தோ டழைத்தேன் நான் ஆபத்தாய் முடிந்ததெனச் சோர்வை அவன் பெற்றுச் சுடுமூச்சை விடக்கூடும்’ இதுதான் நம் நாட்டில், பலர் வீட்டில் இன்றைக்குப் பொதுவாகக் காணுகின்ற பொல்லாத புதுஊடல் விருந்தினர்கள் வந்தால் விரைவாக ஊடல் பறந்தோடிப் போய்விடுமாம் பழம் நாளில் இந்நாளில் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/42&oldid=883059" இலிருந்து மீள்விக்கப்பட்டது