பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிள்ளைக் கனியமுதைப் பேசும்பொற் சித்திரத்தை' அள்ளி அணைத்ததைப் போல் ஆனந்தம் தோன்றாதா? நளனுக்கும் தமயந்தி நங்கைக்கும் மெய்க்காதற் களனமைத்துக் கொடுப்பதற்குக் கனிவாகத் துதுசென்ற அன்னம் என்கின்ற அறிவான பறவையினம் முன்னம் இருந்த இடம் முழவொலிக்கும் மருதம்தான்! பள்ளு வகைநூல்கள் பல தோன்றக் காரணமாய் உள்ள இடம் இந்த உயர்வான மருதம்தான் ஏட்டில் எழுதாமல் இதயத்தில் எழுதி வைத்த நாட்டுப் பாடல் கேட்க நாடுமிடம் மருதம்தான்! பூவிற் சிறந்ததெனப் போற்றும் கமலப்பூ வாவி நிறைந்த இடம் வாசம் கமழுமிடம் செல்வம் கொழிக்குமிடம் (செந்தமிழும் செழிக்குமிடம் மீரா & 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/44&oldid=883062" இலிருந்து மீள்விக்கப்பட்டது