பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்அ. சிதம்பரநாதன்.அவர்களின் அணிந்துரை 'மூன்றும் ஆறும்' என்னுந் தலைப்பில் கவிஞர் திரு.மீ.இராசேந்திரன் (மீரா) இயற்றி வெளியிடும் கவிதை நூலினைப்படித்து மகிழ்ந்துள்ளேன். அவர், சொல்லழகும் கருத்தழகும் நிரம்பிய கவிதையாற்றும் தகுதியுடையவர் என்பது முன்னரே அறியப்பட்ட செய்தி. தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திலும் அவர் நாட்டமுடையவர் என்பது இத்தொகுப்பாலும் உறுதியா கிறது. எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்துக்களை நயம்பட உரைக்கும் அவரது திறத்தினைப் போற்று கின்றேன். பல இடங்களில் அவரது நகைச்சுவை, செய்யுளுக்கு மெருகூட்டியுள்ளது. கவியரசர் முடியரசனாரிடத்தில் அவர் பெருமதிப்பு வைத்துள்ளார். கவிஞரைக் கவிஞர் போற்றுவது தக்கதே. வீரம், கருமை முதலிய தலைப்புக்களில் வந்துள்ள அவருடைய கவிகள், அவரது அவையடக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். - - கற்பரசி கண்ணகியிடத்திலும், அவர் திறம் இயம்பிய சேரர்கோனிடத்திலும், இக்கவிஞர் மிக்க ஈடுபாடு டையவர். பல இடங்களிற் கண்ணகியின் திறம் ஒதப் பட்டுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/5&oldid=883074" இலிருந்து மீள்விக்கப்பட்டது