பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா 49


செயற்கை மழை நீரைப்
பெய்விக்க முயலும்
பெருமைக் குரியவன் யார்?
கலைஞர் உரையாடல்
கவிஞர் உயிர்ப்பாடல்
சிலையாகி மனங்கவரும்
சிற்றிடையாள் நடனம், கண்
மருட்சி பெறச்செய்யும்
மகத்தான காட்சியுடன்
புரட்சி நடிப்பாற்றல்
புகுத்தி வறிஞர்களும்
அரைவெண்பொற் காசளித்து
முழுஇன்பம் அனுபவிக்கத்
திரைப்படத்தை உருவாக்கித்
தந்தவன்யார்? விஞ்ஞானி!

விஞ்ஞானி பரப்பும்
வெளிச்சம் இலையென்றால்
அஞ்ஞான இருளை
அகற்ற வழியில்லை.
இந்நாளில் காணும்
ஏற்றமிகு கருவியெல்லாம்
முன்னாளில் கிடையாது;
முன்னேற்றம் கிடையாது;

தருமன் காலத்தில் ஒரு
தந்தி கிடையாது.
கருணன் காலத்தில் கைக்
கடிகாரம் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/50&oldid=984042" இலிருந்து மீள்விக்கப்பட்டது