பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 50 சீதை மணவாளன் ரோமன் காலத்தில் ஏது புகைவண்டி? ஏது தொலைபேசி! கண்ணனுக்குத் தாசன்தன் காலத்தில் உள்ளதைப்போல் கண்ணன் காலத்திலொரு 'கார் ஏது? மேன் மேலும் ஞாலம் பலப்பல விஞ் ஞானம் அடையும்; வருங் காலம் அதன்பயனைக் காணும்; களிப்படையும் பட்டுத் துகிலோடும் பலவண்ண உடையோடும் எட்டுத் தினங்களிலே எப்படியும் வருவேன் நான்' என்றுரைத்துப் போனான்; இருபதுநாள் சென்றும் ஏன் இன்னும் வரக்காணோம்? என்செய்வோம்? ஒருவேளை ஏமாற்றி விடுவானோ..? இருக்காது....! வருந்தாமல் நாம் ஆற்றி யிருந்திடுவோம்; நாளை நிச்சயம் வருவான் - என்றெண்ணிக் கண்கள் இரண்டையும் வழிமேலே ஒன்றவைத்து வெளித்திண்ணை ஒரத்தில் நின்றபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/51&oldid=883077" இலிருந்து மீள்விக்கப்பட்டது