பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 51 காதலனை எதிர்பார்த்துக் கலங்கும் இளமகள்போல் பேதலித்து வண்ணான் பெருவரவுக்(கு) இந்நாளில் எல்லோரும் கலங்குகிறோம்; இதைப்போக்கத் தானாக எல்லாப் பணிகளையும் ஏற்றுத் துணிதுவைத்து முடித்து நொடிப்பொழுதில் காயவைத்துத் தேய்த்து மடித்துத் தருகின்ற மனத்துக் கினிதான எந்திரவண் ணான்விரைவில் இல்லம் அனைத்திலுமே வந்தாலும் வரலாம்; வரச்செய்வான் விஞ்ஞானி கல்வி யளித்துக் கசடகற்றும் கணக்காயர் எல்லாரும் விரைவில் இறுதி விடைபெற்றுப் பைய விலகிவிடப் பலநூலின் எண்ணத்தை ஐயம் திரிபறவே அதிசயமாய்க் கற்பித்தும் கேள்விக்குத் தக்கவிடை கேட்டும், நல் தேர்வுவைத்தும் நாள் முழுதும் பாடம் நவில்கின்ற மின் ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/52&oldid=883079" இலிருந்து மீள்விக்கப்பட்டது