பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் தனிநாளும் விரைவில், அதிவிரைவில் வந்தாலும் வரலாம்: வரச்செய்வான் விஞ்ஞானி குற்றாலம் கொடைக்கானல் குயில் கூவிக் கொண்டிருக்கும் வற்றா எழில்மிக்க வையை அணைக்கட்டும் மல்லைக் கலைநகரும் மற்றொன் றிதுபோலே இல்லை எனத்தக்க இனிய உதகையும் ஈக்கடியும் கொசுக்கடியும் இருந்தாலும் தெரியாத தேக்கடியும் மூணாறும் தேடி - மகிழ்ச்சியினைக் கரைத்துக் குடித்துக் கதைபேசிக் கண்ணாலே சிரித்திருக்கும் காதலர்கள் செல்லாமல் நினைத்தவுடன் சந்திரமண்டலம்செல்லும் விந்தைப் புதுநாளும் வந்தாலும் வரலாம்' வரச் செய்வான் விஞ்ஞானி! கடல் நீரில் பயிர்விளைச்சல் கண்டு பெருக்கிடவும் படகேறிச் சுடுகின்ற பாலையிலே சென்றிடவும் மீரா હી. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/54&oldid=883083" இலிருந்து மீள்விக்கப்பட்டது