பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும்

54

 மாண்டவனை எழுப்பிடவும்
மனிதன் தனையுயர்த்தி
ஆண்டவனைப் போலெங்கும்
ஆட்சி செலுத்திடவும்
விஞ்ஞானம் வழிவகுக்கும்!
வெற்றிக்கை யெழுத்திட்டு
மெய்ஞ்ஞானப் பத்திரத்தை
மேதினிக்(கு) இயற்றிவைக்கும்!

கனியறுக்க உதவுகின்ற
கத்தியினைக் கெடுமதியால்
மனிதன் கழுத்தறுக்க
மனிதன் பயன்படுத்தும்
பொல்லாச் செயலைப்போல்
பூதலத்தில் அறிவியலால்
நல்ல பயனடையும்
நாட்டம் சிறிதுமின்றி
ஆதிக்க வெறிபிடித்தோர்
அணுக்குண்டால் தம்பலத்தைச்
சோதிக்க நினைக்கிறார்
சுகத்தை அழிக்கின்றார்! ஆக்கத் தொழிலுக்கே
அணுசக்தி என்கின்ற
நோக்கங்கொண் டால்வையம்
நொடிப்பொழுதில் பூக்காடே!

மேலைத் திசைநாட்டில்
மேதக்க விஞ்ஞானச்
சாலைகளை அமைத்துச்
சரியான வளர்ச்சியினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/55&oldid=498034" இலிருந்து மீள்விக்கப்பட்டது