பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா 56

நாடுகின்றார்; வளர்கின்றார்.
நாமோஉட் பூசலினால்
வாடுகிறோம்: வீணான
வளர்ச்சியினால் வதங்குகிறோம்!

விஞ்ஞானம் கண்டவரோ
விண்ஞானங்[1] காண்கிறார்;
மெய்ஞ்ஞானம் பேசும்நாம்
மெய்யையும்பொய் என்கின்றோம்

கையில் கிடைத்த
கனியைச் சிவபெருமான்
வையகத்தைச் சுற்றிமுந்தி
வரும்பிள்ளைக் களிப்பதுவாய்ச்
சொன்னார்; பின் சுற்றிவந்த
வேலவனுக் களிக்காமல்
தன்னைமெல்லச் சுற்றிவந்த
தனயனுக்குத் தான் அளித்தார்
என்ற கிழக்கதைகள்
இயம்பும்வரை விஞ்ஞானம்
வென்று தலைதூக்கி
விளங்கமுடி யாதிங்கே!

கொடிக்கும் சிறுசெடிக்கும்
கூடஉயி ருண்டென்று
தொடக்கக்கா லத்தில்நம்
தொல்காப்பி யன்உரைத்தான்.


  1. விண்ஞானம் - Space Science
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/56&oldid=984053" இலிருந்து மீள்விக்கப்பட்டது