பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு. o 淹 *: அரசே "வணக்கம். அன்பர் வணக்கம். மனிதனைப் பாட மாட்டேன் என்றே பேரடம் பிடித்த பிள்ளைப் புலவன் வழியில் அடியேன் வந்தவன் அல்லேன் இதோ நான், மனிதனைப் பாடுவேன்! மனிதனைப் பாடுவேன்! மனிதனின் வாழ்வு மகத்துவம் பாடுவேன் அதற்குமுன் ஊஞ்சல்மண்டபத்தில் உட்கார்ந் திருக்கும் உங்களைக் கேட்கிறேன்; உண்மையில் மனிதன் வாழுகின்றானா? இல்லை - வாழ்வதாய்ப் பொய்ம்மை நாடகம் போடுகின்றானா உங்களைக் கேட்கிறேன்.... உங்களைக் கேட்கிறேன் பார்த்தால் கண்களைப் பறிக்கும் நாகப் பாம்புடல் போலப் பளபளக்கின்ற மாடி வீட்டில் மன்னவன் போல ஒருவன் காலை ஒன்பது மணிவரை பஞ்சு மெத்தையில் படுத்துக் கிடக்கிறான்; கட்டிய மனையாள் கனிந்த வாயால் பள்ளி எழுச்சி பாடக் கேட்டு f கவியரங்கத் தலைவர் முடியரசன்.

  • கவியரங்கம் நிகழ்ந்த இடம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/59&oldid=883091" இலிருந்து மீள்விக்கப்பட்டது