பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 59 மெல்ல விழிக்கிறான் மேனி நெளிகிறான்: எழுகிறான். குளிக்கிறான்; இலையில் படைத்ததை இனிதாய்ப் புசிக்கிறான்; ஏப்பம் இசைக்கிறான்; சிறிதுநேரத்தில் சிங்கார ஊர்தியில் ஏறி அமர்கிறான்; எதிர்பார்த் திருக்கும் கோலா கலவிழாக் கூட்டத்திற்கு வருகிறான்; தலைமை வகிக்கிறான்; புகழ்ந்தோர் போட்ட பூ மாலையைப் போட்டுக் கொண்டே பேச, வாய் திறக்கிறான் - பேசவா செய்கிறான்.... 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாசக அருள்மழை பொழிகிறான்* - - - - - அடடா தரணியில் சமத்துவப் பயிரைத் தழைக்கச் செய்வோம்' என்கிறான்; இடையிடை ஏசுவை புத்தரை, காந்தியை இழுக்கிறான்; ஒரேகை தட்டல்....! எல்லார்க்கும் நன்றி இயம்பிய பின்னர் உல்லாச வண்டியில் இல்லம் வருகிறான்; இரண்டுகல் கடக்கிறான்; எதிரில் ஒருவன் பட்டினி யால்கண் பார்வை மங்கி நடக்கவொண் ணாமல் நடுவீதி யில்விழக் காண்கிறான்; உடனே கருணை நெஞ்சன், 'தரித்திரம் பிடித்த சனியனை ஒரத்தில் தூக்கிப் போட்டுத் தொலையடா!' என்று 'காரோட்டி'க்குக் கட்டளை இடுகிறான்; கட்டளை வென்றதும் களிப்புடன் செல்கிறான். இப்படி உளத்தில் நஞ்சும் உதட்டில் அமுதமும் உடையவன் மனிதனா? உடையதா வாழ்வு? உங்களைக் கேட்கிறேன்! உங்களைக் கேட்கிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/60&oldid=883095" இலிருந்து மீள்விக்கப்பட்டது