பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 60 தன்மரு மகளின் தலையைப் பிடித்துக் கொடுமைப் படுத்தும் கோபக் கார மாமியார் போல, மழைமயச் சூறை கூரையைப் பிய்க்கும் குச்சு வீட்டில்குறைவறப் பெற்ற குழந்தைகளோடு குடியிருக் கின்ற குசேலன் தம்பி ஒருவன் கதிரவன் உதிக்கும் முன்னே காலை வேளையில் கண்விழிக் கின்றான்; ஏதேனும்கூழ் இருந்தால் குடித்துக் கலப்பை யோடும் காளைகளோடும் வயலை நோக்கி வருகிறான்; உழைக்கிறான்; நிலமங் கைக்கு நெற்றியின் முத்தை வழங்கி வழங்கி வள்ளல் ஆகிறான்; நடுகிறான்; ஒவ்வோர் நாளும் பாடு படுகிறான். மணிகளைப் பார்க்கிறான்; ஒருநாள் அறுக்கிறான்; குவிக்கிறான்; ஆனால் குவித்ததைத் திடீரென ஒருவன் திருடன்போல் வந்தே பறிக்கிறான்; சாக்குப் பைக்குள் கட்டி இருபது வண்டியில் ஏற்றிச் செல்கிறான்! இப்படி ஒருவன் உழைக்க, மற்றொருவன் பிழைக்க இருப்பதா வாழ்வு? இதுவா வாழ்வு? ஒருவன்.... மாடுபோல் பார வண்டியை இழுக்கிறான்! கழுதைபோல் முதுகில் கனத்தைச் சுமக்கிறான்! நாய் போல் எச்சில் நக்கித் திரிகிறான்! பன்றிபோல் சாக்கடைப் பக்கம் படுக்கிறான்! எனில், மற் றொருவன் இன்னொரு பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/61&oldid=883097" இலிருந்து மீள்விக்கப்பட்டது