பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 61 எலிபோல் சுரண்டி எங்கோ ஒளிக்கிறான்! ஒநாய் போல்பிறர் உழைப்பைக் குடிக்கிறான்! ஒட்டகம் போல ஒதுக்கிவைத் துண்கிறான் நரியைப் போல் நன்கு நடிக்கிறான்! இப்படி ஒருவன் வாட, மற் றொருவன் வாட் இருப்பதா வாழ்வு? இதுவா வாழ்வு? உங்களைக் கேட்கிறேன்; உங்களைக் கேடகமறன. வாழைப் பழத்தைவாங்குதல் போல ஏழையின் கற்பை எளிதாய் வாங்கித் துகில்உரி கின்றதுச்சாதனர்கள் சதிவலை பின்னும் சகுனிகள் இன்னும் இருக்கின்றார்களே இங்கே இவர்கள் இறக்கும் நாள்- மனிதன்பிறக்கும் நாள் இல்லையா? உங்களைக் கேட்கிறேன்! உங்களைக் கேட்கிறேன்! விண்ணுக்கு மனிதன் விரையட்டும்; அதற்குமுன் கண்ணுக் கெதிரில் காணும் கயமையை விரட்டி அடித்து வீழ்த்த வரட்டும். செயற்கை மழைபெயச் செயட்டும்; அதற்குமுன் துன்பக் கிணற்றைத் துர்க்க வரட்டும். அணுவில் தாண்டவம் ஆடட்டும்; அதற்குமுன் மனிதனை மனிதனாய் மாற்ற வரட்டும். வாழ்வை வசந்தமாய் ஆக்க வரட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/62&oldid=883099" இலிருந்து மீள்விக்கப்பட்டது