பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 62 என்றைக்கு ஏழ்மை வறுமை இடுகா(டு) ஏகுமோ சத்தியம் பூக்குமோ சமத்துவம் சிரிக்குமோ இலட்சிய வெறிகொண்டிளைஞர் பட்டாளம் புதிய உலகுக்குப் பூசை போடுமோ பழைய பொய்ம்மைகள் பயந்தோ டிடுமோ தன்னலம் மறந்து தாயகம் காத்த மறவர் படைக்கு மரியாதை கிடைக்குமோ தியாக உணர்வுத் தீக்குளித்திட்ட வீரருக் கெங்கும் விழாக்கள் நடக்குமோ அன்றே, - மனிதன் பிறக்கும் நாள் மனிதன் வாழும்நாள்! அன்றே மனிதனைப் பாடுவேன்; மனிதனைப் பாடுவேன்; மனிதனைப் பாடுவேன்; மனமகிழ்வோடே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/63&oldid=883101" இலிருந்து மீள்விக்கப்பட்டது