பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் ை இவன்தான் மூன்றென்னும் இனிதான எண்பற்றிக் கவிபாட முடியுமெனக் கருதி அழைத்தாரோ? இல்லை ஒற்றைத் தனிமரம்போல் ஒருகாலம் வாழ்ந்திருந்தான் சற்றும் சுவையின்றிச் சலித்துமணம் வாடிப்பின் திரண்ட வனப்புடைய - சேயிழையை மணமுடித்தே இரண்டானான்; ஈரிரண்டு நாட்களுக்கு முன் வாழ்க்கை பற்றுக்கொரு பிடிப்பாய்ப் பால்வண்ணச் சுடர்மதியைப் பெற்றுமூன் றாகிப் பெருமைப் படுகின்ற இவன்தான் மூன்றென்னும் நல்எண்பற்றி அனுபவித்துக் கவிபாட முடியுமெனக் கண்டு பிடித்தாரோ? கண்டு பிடித்திந்தக் கவிதை அரங்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்; குழந்தையையும் கடவுளையும் ஒன்றாகக் கொண்டாடும் பழந்தமிழர் கூடியுள்ளீர்; பயமின்றிப் பாடுகின்றேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/67&oldid=883108" இலிருந்து மீள்விக்கப்பட்டது