பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 68 காகங் கழுகுண்ணக் காத்திருக்கும் காட்டகத்தே ஏகுங்கால் ஊதும் இழவுச்சங் கொன்று - என்று தங்கள் புவிவாழ்வில் சந்திக்கத் தவறாத சங்குகளும் மூன்றாகும்! சங்க இலக்கியத்தைப் படித்துச் சுவைத்துப் பசித்தால் மிகவிரும்பிக் கடித்துச் சுவைக்கும் கனிவகைகள் மூன்றாகும்! 'காதலென்றும் மனமென்றும் 'களவெ'ன்னும் கற்பெ'ன்றும் ஒதுதமிழ்ச் சொற்களெல்லாம் உருவாகும் மூன்றெழுத்தில்! அப்பா, அம்மா, அத்தை அக்கா, தங்கை, தம்பி செப்பும் அண்ணா என்னும் தேனுறவுச் சொற்களையும் உருவாக்கும் மூன்றெழுத்தே! ஒருபாவை, வயிற்றினிலே கருவாய் வளர்த்துக் கணக்காய் ஈரைந்து மாதத்தில் காணும் மணிக் குழவி மூன்றெழுத்தே|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/69&oldid=883112" இலிருந்து மீள்விக்கப்பட்டது