பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நா. இலக்குமணப்பெருமாள் அவர்களின் முன்னுரை நாம் வாழ்கின்றோம் என்பதைவிட வாழ்வதற்காகப் போராடுகின்றோம் என்பதே பொருத்தமாகும். அமைதியும் சாந்தமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று கொண்டால், அத்தகைய வாழ்க்கையை நுகரும் பேறு இங்கு இதுவரை எவ்வுயிர்க்கும் கிட்டவில்லை. ஆனால் நாளைவாழ்வு நல்வாழ்வாக அமையலாம் என்ற நம்பிக்கை எல்லாவுயிர்களுக்கும் உண்டு. அந்த நம்பிக்கையின் விளைவுதான் போராட்டம். ஒரு மனிதனின் வாழ்க்கையை எழுதுகின்றோம் என்று சொன்னால், அவன் வாழ்வதற்காக நிகழ்த்திய போராட்டங்களை எழுதுகின்றோம் என்பதுதான் பொருள், மகுடம் தாங்கிய மன்னன்முதல் மண்வெட்டி தூக்கும் கூலி வரையிலும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அலெக் சாண்டர் களத்திலே எதிரிகளோடு போராடினான்; அல்லாப்பிச்சை அலுவலகத்தில் காகிதங்கள் என்ற உதிரி களோடு போராடுகின்றான். அவரவர் வாய்ப்புக்குத் தகுந்தவாறு போராட்டம் அமைகின்றது. "வாழ்வு' என்ற தலைப்பை இக்கவிதைக் தொகுதியில் கண்டவுடன், கவிஞர் வாழ்வை மேற்போக்காகப் பார்த்தவாறு மனிதன் வாழ்ந்ததைப் பாடுகின்றாரா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/7&oldid=883114" இலிருந்து மீள்விக்கப்பட்டது