பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 69 மோதும் பிறமொழியின் மோகத்தால் சிலதாயர் 'அம்மாவென் றக்குழவி அழைப்பதனை விரும்பாமல் மம்மி யென்றே சொல்லப் பயிற்றுவிப்பார்; புரியாமல் அம்மியென்று கூறும் அதுசரிதான்.... குழவிக்(கு) ஒர் அம்மிதானே அன்னை? அடடா, மிகப்பொருத்தம்! மனைவியென்றும் வாழ்க்கைத் துணைவியென்றும் மணித்தமிழில் இணையான சொல்லிருக்க 'இல்லாள் என்றொருசொல்ஏன்? இல்லத்தை ஆளும் இயல்புடையாள் என்பதனால் 'இல்லாள்" எனப்பட்டாள் பெண்என்பர்; என்றாலும் 'அரிசியில்லை உப்பில்லை அடுப்பெரிக்க விறகில்லை. கறிக்கடைக்குச் சென்றுவரக் கையில் பணமில்லை" என்றுதினம் 'இல்லை' யெனும் மூன்றெழுத்துப் பல்லவியை நின்றிசைக்கும் காரணத்தால் நேரிழையாளை, முன்னோர் f -ošišov cupé@ Mummy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/70&oldid=883115" இலிருந்து மீள்விக்கப்பட்டது