பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 70 இல்லாள் என் றார்என்பேன்; இதைக் கேட்டுச் சீறிவர நல்லவேளை - என்றன் நாயகியாள் இங்கில்லை! 'கொட்டு முரசொலிக்கக் கொள்கைத் திறம்சிறக்க எட்டுத் திசைகளிலும் இசைபரப்பி, ஒளிபரப்பி அண்ணாஇத் திருநாட்டை ஆண்டிடுவாய் நீ" என்று அண்ணல் இளங்கோ அகமகிழ வாழ்த்திவிட்டுச் சென்றார்; சமண்பள்ளி சேர்ந்தார்; சிலம்பிசைத்தார். என்றும் இறவாமல் இருக்குமவர் காப்பியத்தின் காண்டங்கள் மூன்றன்றோ! கதைக்களங்கள் மூன்றன்றோ! ஆண்டஇனம் மூன்றன்றோ! அவ்வினத்தார் விண்தழுவ ஏற்றிப் பறக்கவிட்ட எழிற்கொடிகள் மூன்றன்றோ! போற்றி அவர்வளர்த்த பூந்தமிழும் மூன்றன்றோ! குத்து விளக்கெரிந்து கொண்டிருக்கும் பந்தலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/71&oldid=883117" இலிருந்து மீள்விக்கப்பட்டது