பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LÊgir &q. 71 பத்துப் பெரியவர்கள் பல்லாண் டிசைத்துநிற்கச் செங்கரும்புச் சாற்றினிப்பைத் தேகமெங்கும் சேர்த்துவைத்த மங்கை ஒருத்திக்கு மங்கல நாண் பூட்டி அகம்மலரக் கண்மலர முகம்மலரப் போடும் முடிச்சுக்கள் மூன்றன்றோ! மின்னும் இளமையெழில் மேனிக்கே ஏற்றாற்போல் பொன்னும் மணியும்மிகப் பூணக் கிடைத்தாலும் பூவையர்கள் வாழ்வினிலே போற்றுகின்ற மங்கலங்கள் பூவோடு கொச்சிமஞ்சள் பொட்டென்னும் மூன்றன்றோ! 'ஈசன் எனினும், அவ்ஈசனுக்குத் தொண்டாற்றும் தாசன் எனினும், உயர் தத்துவங்கள் பேசும் அடிகள் எனினும், இல்லை அன்றாடம் உழலும் குடிகள் எனினும், செங் கோலேந்து வோரெனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/72&oldid=883119" இலிருந்து மீள்விக்கப்பட்டது