பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 12 எல்லாரும் ஒன்றெமக்கே என்பது போல் ஓயாத தொல்லை கொடுத்திரவுத் தூக்கம் கெடுத்துள்ளம் வாட்டி வருத்தி வதைத்துநிதம் புண்படுத்தி ஆட்டிப் படைக்கின்ற ஆசைகளும் மூன்றன்றோ! 'தீயவற்றைப் பார்க்காதே தீயவற்றைக் கேட்காதே தீயவற்றைப் பேசித் திரியாதே' என்ற அற உருவாய்த் திகழ்ந்த ஒருகாந்திக்(கு) உண்மைக் குருவாய் இருந்தசிலைக் குரங்குகளும் மூன்றன்றோ! உலகம் உயர உழைத்தஅக் காந்தியின்மேல் கொலைகாரன் சுட்டகொடுங் குண்டுகளும் மூன்றன்றோ! மூன்றுபே ராய்ச் சென்றால் முடியாது வினையென்று மூன்றை வெறுப்போர்கள் முட்டாள்கள்; மாறாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/73&oldid=883121" இலிருந்து மீள்விக்கப்பட்டது