பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் செயல் வகை உப்புச் சுவையோ(டு) , உதித்தகடல் போலன்றித் தப்பி உதித்த தனிக்கடலே தமிழ்க்கடலே' வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுத்த ஐயன் புகழை அழகழகாய் அற்புதமாய் வீரக் குரலில் விளக்கவந்த தோழர்காள்! ஊரகத்தீர்! உங்கட்கென் உள்ளங் குளிர்வணக்கம்! பொருள் செய்யும் வகைபாட புறப்பட்டு வாவென்று குறட்கழகத் தார்என்னைக் கூப்பிட்டார் எதனாலோ? கயல்துள்ளிக் களிக்கின்ற கடல்கடந்து தம்பொருளை அயல்நாடு பலவற்றில் அளவின்றிப் புரளவிட்டுக் f கவியரங்கத் தலைவர்-தமிழ்க்கடல் ராய.சொ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/77&oldid=883129" இலிருந்து மீள்விக்கப்பட்டது