பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 78 ஒருவகையில் பொருளுண்டென்(று) உணர்ந்தென்னை அழைத்திருப்பார் என்று கருதுகிறேன்: இல்லையா அவையோரே? நன்று மிகநன்று நான்முயற்சி செய்கின்றேன். பொருளென்றால் தலைப்பென்றும் பொருளென்றால் அர்த்தமென்றும் பொருளென்றால் பணமென்றும் பொருளுக்குப் பலபொருளாம் அரியதொரு வாழ்க்கையெனில் அதற்(கு) அர்த்தம் வேண்டுமன்றோ? அரியதொரு வாழ்க்கைக்கோர் அர்த்தமே சேர்ப்பதென்றால் பொருள்சேர்க்க வேண்டும்; பொதுவாக வாழ்க்கைக்குப் பொருள்வேண்டும் என்றே புகன்றால் பொருந்தாதோ? எதையும் பகுத்தறியும் எண்ணம் குருடாகி இதயம் முடமாகி இருக்கும் பிறவிகளும் கையில் பணமிருந்தால் கண்டிப்பாய்க் கொண்டாடும் தெய்வமாய் மாறிடலாம்; திருக்குறளார் இதைஉணர்ந்தே 'பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/79&oldid=883135" இலிருந்து மீள்விக்கப்பட்டது