பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 6 வாழ்வதைப் பாடுகின்றாரா அல்லது வாழப்போவதைப் பாடுகின்றாரா என்று நினைத்துப் படித்துப் பார்த்தேன். இவற்றுள் எதையும் பாடாது மனிதன் இன்னும் வாழவில்லை; மனிதன் எப்போது வாழ்கின்றானோ அப்போது அவனைப் பாடுவேன்' என்று பாடுகின்றார். "என்றைக்(கு) ஏழ்மை வறுமை இடுகா(டு) ஏகுமோ சத்தியம் பூக்குமோ சமத்துவம் சிரிக்குமோ இலட்சிய வெறிகொண்டு) இளைஞர் பட்டாளம் புதிய உலகுக்குப் பூசை போடுமோ பழைய பொய்ம்மைகள் பயந்தோடிடுமோ அன்றே மனிதன் பிறக்கும்நாள்: மனிதன் வாழும்நாள் அன்றே மனிதனைப் பாடுவேன்! மனிதனைப் பாடுவேன்' என்று பாடும்போது 'நாம் வாழவில்லை வாழ்வை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். (Wenever live, we are always in the expectation of living) grairportrab&Liffair வாசகம் நினைவுக்கு வருகின்றது. 叙 •-4: 牵 'மூன்றும் ஆறும் என்று இத்தொகுதிக்குத் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று' என்ற எண் பற்றியும் ஆறு என்ற பொருளில் ஒடுகின்ற பாய்கின்ற ஆற்றைப் பற்றியும் பாடப்பட்ட இரு கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/8&oldid=883137" இலிருந்து மீள்விக்கப்பட்டது