பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மீரா & 79 பொருள் அல்ல(து) இல்லை பொருள் என்றார். பணமென்றால் பிணங்கூட வாயைப் பெரிதாய்த் திறக்குமென்ற குணமிக்க முன்னோர்தம் கூற்றுச் சரிதானே! இருளில் நடப்பதற்கும் இயன்றிடலாம்; நிச்சயமாய்ப் பொருளின்றி வாழ்வதுவோ பூதலத்தில் இயலாதே! 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என்றார் மெய்யறிஞர். செல்வம் இருந்தால்தான் சேர்ந்திருக்கும் சுற்றமெல்லாம்; இல்லானாய் மாறிவிட்டால் ஈன்றெடுத்துப் பெயரிட்ட அன்னையும் புறக்கணிப்பாள்: அம்மி தனைமிதித்துத் தன்னை மணந்திருக்கும் தையலும் புறக்கணிப்பாள். வறுமை தலைவாசல் வரக்கண்டால் காதலோ பொறுக்காமல் கொல்லைப் புறப்பக்கம் நடைகட்டும்! 'கண்ணே உன் வதனத்தின் கட்டழகை அருந்தியவா(று)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/80&oldid=883138" இலிருந்து மீள்விக்கப்பட்டது