பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 81 நல்வாழ்க்கை யென்று நமதினத்தார் போற்றுகிற இல்வாழ்க்கை பலருக்கின்(று) இல்லாத வாழ்க்கையே! இல்லையெனும் சொல்லின் எதிரொலிகேட் காதிருக்கச் செல்வம் பெருகிச் செழித்தாக வேண்டுமன்றோ! வள்ளுவனார் இதற்குத்தான் வழிவகைகள்கூறுகின்றார். கள்ளத் தனமின்றிக் கைத்தனத்தைப் பெறவேண்டும். காடு திருத்திக் கழனி களைக்கண்டு பாடுபடவேண்டும்; பயன்காணவேண்டும் நாம். குத்துக்கல் போல் வீணாய்க் குந்தியிரா மல், ஆழி முத்துக் குளிப்பதற்கு மூச்சடக்க வும்வேண்டும். பூவிரித்து மணம்பரப்பும் பூங்கா நிறைந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையில் முன்னாளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/82&oldid=883141" இலிருந்து மீள்விக்கப்பட்டது