பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 2 ஏற்றுமதி செய்தபொருள் ஏராளம் ஏராளம்! இற்று மதியனைய கேரளத்துத் தந்தமுடன் தேக்கும் மிளகும் செழுமுத்தும் சந்தனமும் தூக்கிச் சுமந்தபிறர் தோணிகளோ ஏராளம்| ஏற்றுமதி செய்துபொருள் ஈட்டியதோர் காலம்போய் வேற்று நிலமிருந்து வேண்டும் அளவுக்(கு) இறக்குமதி செய்துகொண்டே இருக்கின்றோம்; நம் நாடு சரக்குகளை விரிக்குமொரு சந்தையாய் மாறியதே! எந்த இடமெனினும், இன்னலிருள் நீக்குகின்ற நந்தா விளக்கென்றும் செருக்கறுக்கும் எஃகென்றும் அன்புத்தாய் பெற்றெடுத்த அருட்குழவி தனைவளர்க்கும் இன்பச் செவிலியென்றும் இன்னும் பலவாறு பொய்யா மொழிப்புலவர் பொருளைப் புகழ்கின்றார்; 'செய்க பொருளை' எனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/83&oldid=883143" இலிருந்து மீள்விக்கப்பட்டது