பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 4ே பரிசாய் எதிர்பார்த்தல் பச்சைக் குறுக்குவழி இந்த வழிகளிலே ஈட்டும் பொருளெல்லாம் வந்ததிலும் விரைந்தேகும்; வள்ளுவனார் அதனால்தான் 'அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள - விடல்' என்று போதித்தார். சேர்த்தபெரும் செல்வம், ஒரு சித்திரத்தாள் கவின்விழிகள்பார்ப்பதற்கும் காதலனால் பார்க்கப் படுவதற்கும் பயன்படுதல் போல் தனக்கும் தனைச்சார்ந்த பலருக்கும் பயன்படுதல் வேண்டும். பயனற்ற தைக்குறளார் நன்றியில் செல்வமென்றார்; நச்சு மரமென்றார். மன்றலின்றி மூத்தழிந்த மங்கை நல மென்றார். f அற்றார்க்கு ஒன்றுஆற்றாதான் செல்வம்; மிகநலம் பெற்றாள் தமியள்மூத்தற்று - குறள் (1007).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/85&oldid=883147" இலிருந்து மீள்விக்கப்பட்டது