பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதாளம் மட்டும் பணம்பாயும் என்பார்கள்; பாதாளம் என்ன? அறிவோடு பணமிருந்தால் கண்கவரும் புதுமைக் கருவிகளைக் கணக்கின்றி விண்வெளியை நோக்கி விரைந்து செலுத்தி நாம் வானம் வரைக்கும் பணம்பாயும் எனப்புதுமை யானமொழி படைத்திடலாம்; அமெரிக்கர் ருசியரைப்போல்! பொருளிலையேல் தனிஒருவர்க்(கு) இன்பமில்லை; அறமில்லை. பொருளிலையேல் நாட்டுக்குப் படையில்லை; அரண்இல்லை. பொருளிலையேல் அறவழகர் பொன்னூலுக் கிவ்வூரில் பெரியவிழா நடக்கின்ற பேச்சுக் கிடமில்லை! "திரு' என்றால் பொருள்என்று தேர்ந்ததொரு பொருளுண்டு. பொருள்செய்யும் வகைபற்றிப் போதிக்கும் காரணத்தால் 'திரு' என்ற அடைமொழியத் தேன்குறளுக்(கு) ஏற்றதுதான்! மீரா & 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/86&oldid=883149" இலிருந்து மீள்விக்கப்பட்டது