பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 7 மூன்றும் ஆறும்? ஒன்பது இத்தொகுதியில் அடங்கியுள்ள கவிதைகளும் ஒன்பது. இப்படி இரு வகையிலும் தலைப்புப் பொருத்தமாயிருப்பது ஒரு புதுமையே! இதில் உள்ள ஒன்பது கவிதைகளும் அவ்வப்போது கவியரங்குளில் பாடப்பட்டவை. இப்படி அரங்குகள் அமைத்துப் பாடுவதும் கேட்பதும் அண்மைக் காலத்திய நிகழ்ச்சி. காரைக்குடிக் கம்பன் விழாவிலிருந்து இந் நிகழ்ச்சி முக்கியத்துவம் அடைந்தது என்று எண்ணு கிறேன். - கவிஞர்கள் தாமே வேட்கை காரணமாக எழுதுகின்ற கவிதைகளுக்கும், இக்கவியரங்குக் கவிதைகளுக்கும் வேறுபாடு இல்லாமலில்லை. தம் வேட்கை காரணமாய் எழுதுகின்ற கவிதைகளிலுள்ள கவித்துவம், இலட்சியம் என்பனவற்றைக் கவியரங்குக் கவிதைகளில் அதிகம் காண்பதற்கில்லை. கூட்டத்தினரின் சுவைக்கேற்பவும், அவர்களை மகிழச் செய்வதற்காகவும் கவியரங்குகளில் கவிஞர்கள் பாடுகின்றார்கள். ஆகவே, சில குறைபாடுகள் காணப்படுதல் இயல்பே. கவிஞர் மீரா கூட்டத்தினரின் சுவைக்கேற்பத் தம்மை முற்றிலும் அடிமைப்படுத்திக் கொள்ளாமல், தம்வழியில் அவர்களைத் திருப்ப முயல்வது வரவேற்கத்தக்கது. ©. * கவிதைக்குச் சிந்தனை தேவையில்லை; உணர்ச்சி போதும் என்று சிலர் சாதிக்கின்றார்கள். 'இல்லை. சிந்தனையே ஊற்று' என்று சிலர் வாதிக்கின்றார்கள். புதிய கருத்துக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/9&oldid=883156" இலிருந்து மீள்விக்கப்பட்டது