பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lổgm &o. 89 கங்கைகொண்டான், செல்வக் காவிரிகொண்டான் என்னும் சிங்க மறவன்தன் திருப்பெயரைக் கொண்டதனால் ஆற்றின் நலம்பாட அடியேன் தான் பொருத்தமெனப் போற்றி அழைத்தீர்கள் போலும்! அதுசரிதான்.... கண்ணிர் வடிக்கின்றார் காரிகைபோல் அந்தோ என்(று) எண்ணி ரகுமானுக்(கு) இரங்கிடலாம்! ஏன் இந்த ஆற்றங் கரையின் அருகிருந்தும் ஏரியைப்போய் ஏற்றிப் புகழவந்தார் என் தம்பி நன்றியில்லை; பொன்னி எனு ம்பெயரைப் பூண்டிருக்கும் புலவர்மகன் என்ன கருத்தால் இமிழ்கடலைப் பாடவந்தார்? ஆறு-தலையுடை தமிழ் அன்பன் செகதீசன் எவ் வாறு மழைமாட்சி வருணிக்க வந்தாரோ? 'நீர்க் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணிர், ஏரி, கடல், மழை பற்றிப் பாடிய கவிஞர்கள் முறையே அப்துல் ரகுமான், தியாகராசர் கல்லூரி மாணவர் காமராசன், பொன்னிவளவன், தமிழன்பன் என்ற செகதீசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/90&oldid=883158" இலிருந்து மீள்விக்கப்பட்டது