பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 91 நயமுணரும் கவிஞர் - நதிமாட்சி தனில்மயங்கி ஆறில்லா ஊரின் அழகுபாழாம் என்று கூறிக் களித்தார்கள் கொஞ்சு தமிழினிலே! வெள்ளையர்தம் பிடியினின்று விடுபட்டால் ஆனந்தப் பள்ளிசைக்கும் தன்னாட்சிப் பாரதம் தோன்றிவிட்டால் பாலாறு தேனாறும் பாயுமென அன்றைக்கு நாலாறு தரம் சொன்னார் நாவினிக்க! இன்றைக்குப் பாலாறோ தேனாறோ வேண்டாம் - கலப்பின்றிப் பாலேனும் தேனேனும் பார்க்க வழியுண்டா? ஆனாலும் பல்லவர்கள் ஆண்ட பகுதியிலே பேணி உரைக்கப் பெயரளவி லேனுமொரு பாலா(று) இருக்கிறதே! பாற்கடலா இருக்கிறது? காலத்தைப் பகுத்தறிவைக் கவிழ்க்கும் புராணத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/92&oldid=883161" இலிருந்து மீள்விக்கப்பட்டது