பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மடையே திறந்ததுபோல் பேசுகின்றார் எனில்அஃதோர் பிழைதானே? அலைக்கரங்கள் வீசு கடலுக்கிவ் வெயில் நாட்டில் மடையுண்டா? இருந்திருந்தால் தனுக்கோடி தண்ணீருக் குள்ஓடி இருக்காதே! தனிக்கோடி எனமாறி இருக்காதே உமையவள்மேல் சிவனாருக் குள்ள தொருகாதல் இமயம்போல் பெரிதில்லை! இருந்திருந்தால் தன்னுடம்பில் கலை உமையை இருக்கவைத்துக் கங்கைநதிப் பர்வையினைத் தலைமேலே தூக்கிவைத்துத் தாங்கிக்கொண் டாடுவரா? உமையவளை மலைமகளென்(று) உரைப்பதும் பொய் பகுத்தறியும் உமைப்பார்த்துக் கேட்குங்கால் உண்மையிலே ஆறன்றோ மலைகளாம் என்றுரைப்பீர்! மணிக்குறிஞ்சி என்கின்ற மலையன்னை பெற்றமகள் மாமுல்லை யில்மணந்து மருதக் குழந்தையினை மலர்க்கரத்தால் தாலாட்டி கருணையுடன் நெய்தலுக்கும் கதைசொல்ல விரைகின்றாள். மீரா હ. 93.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/94&oldid=883164" இலிருந்து மீள்விக்கப்பட்டது