பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 94 மணியாற்றின் இருகரையில் ஒருமைப்பாட்டைக் காட்ட அணிகலனாய்ப் பாலங்கள் அமைக்கின்றார் பொறியியலார் நாட்டொருமைப் பாட்டுக்கே தன்னையொரு பாலமெனக் காட்டிக்கொண்டிருப்பதெது? நாகரிகக் கவினாறே! ஆறும் மழையும் நீர் அளிக்காவிட்டால் ஏரி வேறு கதியின்றி விரைவினிலே வற்றிவிடும்; மழைபெய்யா விட்டாலோ வான்பொய்த்த தென்பார்கள்: மழை அதிகம் பெய்தாலும் பேய்மழைதான் என்பார்கள்! குடிக்க ஒருகை நீர் கொடுத்தே உதவாத கடல்நீர் நிறைந்தென்ன? காஞ்சிரங்காய் பழுத்தென்ன? ஆற்றின்கண் மட்டும் அதிகப் பெருமையுண்டு! நாற்றுக்குப் பால்வார்க்கும் நற்றாயின் நற்குணமுண்டு) ஒ: டப்பாப் பாடல்கள் ஒழியாதா என்பார்கள் ஒடப்பாடல்கேட்டே உளங்குளிர வழியுண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/95&oldid=883166" இலிருந்து மீள்விக்கப்பட்டது