பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழியைக் கவர்ந்து விளையாடும் மீன்கள் உண்டு) அழகுண்டு; மின்விசையின் ஆற்றல் மிகஉண்டு; மாற்றார்க்கும் இம்மண்ணின் மறவர்க்கும் முதல்யுத்தம் ஆற்றங் கரையில் தான் அந்நாளில் நடந்ததுவாம்! அலெக்சாந்தர் என்கின்ற அயல்நாட்டுப் பேரரசன் மலைமார்பன் புருடோத்த மன்-என்னும் மன்னனையே சிந்துநதிப் பெண்ணின்இடை சிறுத்தஇடம் பார்த்திரவில் வந்துவென்றான்; அன்று முதல்-கிரேக்கர் வாய்மொழியால் சிந்து நதிபாய்ந்து செழிக்குமிந்த மயில்நாடு சிந்தியா ஆயிற்று; சிலகாலம் சென்றபின்னர் இந்தியா ஆயிற்(று); இதுமாறி அதிவிரைவில் 'ஹிந்தியா ஆனாலும் ஆகலாம்; வியப்பில்லை! பூகோளப் படத்தினிலே , போடப்பட்டுள்ளநதி பூ(க்) கோல நதியில்லை: மீரா & 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/96&oldid=883168" இலிருந்து மீள்விக்கப்பட்டது