பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் . 96 பொய்நதியே! நான்நதியின் வண்ணக்கோ லந்தன்னை வருணிக்க வா கொஞ்சம்? எண்ணம்போல் வரும் வெள்ளம் இசைவெள்ளம் மணல்மேட்டுக் கரையோரம் கவின் வெள்ளம்! கண்ணுக்குத் தண்ணிழலை வரையாது வழங்குகின்ற வள்ளல் மரக்கூட்டம்! புன்னை சரக்கொன்றை! பூவை இதழ்ச்சுவையும் என்னிடத்தில் தோற்கும் எனுமிளநீர்த் தென்னைகள்! விண்ணை இடிக்க விளைமூங்கில் விரைவாகப் பெண்ணைப்போல் வளர்த்தினத்தைப் பெருக்குவதில் கவனமுள்ள வாழை! பூ நாகங்கள் வாழ இடங்கொடுக்கும் தாழை! நம் ஒளவை தலைமுடிபோல் பூத்திருக்கும் நாணல் காதலர்போல் நயந்து பிணைந்திருக்கும் கோணல் செடிகொடிகள்! புதர்மண்டிக் கிடக்கின்ற கோரைப்புல்! அதனருகே f தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/97&oldid=883170" இலிருந்து மீள்விக்கப்பட்டது