பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 97 கூட்டம்போட் டோடிவரும் நாரைப்புள் அடடே! நலம்பாடிப் பாய்ந்துவரும் நதியை.என் மெய்ந்நாவால் நன்மைக் கெதிரான சதியைக் கொடும்பகையைச் சாய்த்தொழித்துச் சமூகத்தின் வறட்சி நிலைமாற்றி வாழ்வில்புத் துணர்வூட்டும் புரட்சிக் கவிஞரெனப் - புகழ்வேன் நான்..... போதாதா? வாலிபத்தைப் போல்மலர்ந்த வண்ண மலர்த்திரளை மூலிகையை இலைதழையை மோகித்துச் சுமந்தபடி ஆறு வரும்போ(து) அழகாய் அமைந்ததுறை தோறும் புனலாடும் தோகை மயிலார்தம் கூந்தலுக்கு நறுமணத்தைக் கொடுக்கும்; இதையறியா(து) 'ஏந்திழையார் கூந்தல்மணம் இயற்கையிலா செயற்கையிலா... என்றேதோ இறைவனுக்கும் என்முன்னோன் கீரனுக்கும் அன்றொருநாள் இப்பதியில் அனல்வாதம் எழுந்ததுவாம்! இங்கின்றோ இவ்வாதம் எழுவதில்லை; எழுந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/98&oldid=883172" இலிருந்து மீள்விக்கப்பட்டது