பக்கம்:மூன்று தலைமுறை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மூன்று தலைமுறை

துக்கொண்டு கிற்கிறதைப் பார்த்தால் வற்புறுத்திச் சொல்லவே தோன்ருது. கான்தான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேனே! அப்பொழுதெல்லாம் என் அழிகே வேறு. சுமங்கலியைப் போல இருந்தேன். இப்போது தான் மொட்டைச் சுவராகிவிட்டேன். -

ஹாலம்! இனிமேல் அந்தக் காலம் எங்கே வரப் போகிறது? - .

முருகாயிக்குக் கமலம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான். தன்னுடைய ஊரில் அவ கிளப் பார்க்கிறதற்கும் இங்கே அவளேப் பார்க்கிறதற்கும் வித்தியாசம் இல்லையா? அங்கே அவளுடைய அம்மா போவாள்; அவளுடன் முருகாயி போகலாம். இங்கே கம வம்மா சொல்லியனுப்பாமல் எப்படிப் போவது சொல்வி அனுப்பட்டும், போகலாம் என்று இருந்தாள்.

கமலம்மாவோடு அவள் எவ்வளவு சகஜமாகப் பேசி பிருக்கிருள்! முருகாயி கமலம்மாவோடு பேசினதளுல் தான் இந்தக் கல்யாணமே கடந்ததென்று சொல்லவேண் டும். அந்த விஷயமெல்லாம் கமலம்மா நினைக்காமலா இருப்பாள் கிச்சயம் ஒருநாள் கமலம் தனக்குச் சொல்லி விடுவாள் என்று முருகாயி எதிர்பார்த்தாள். -

ஒரு நாள் ஏகாம்பரம், 'கம் புது எசமானி அம்மா வைப் பார்த்துவிட்டு வருவோம் வா’ என்று கூப்பிட் டான். அவள் சரியென்று சொல்லிப் புறப்படவில்லை.

'எனக்கு அங்கே என்ன வேலே அந்த அம்மாவுக்கு என் சீனத் தெரியாதா? அவர்கள் கூப்பிட்டால் போகலாம்' என்று கெளரவத்தை விடாமல் சொன்னுள்.

'நீ பேசுகிறதைப் பார்த்தால், தோன் ஜமீன்தாரிணி போல அல்லவா தோன்றுகிறது? என்ன பிகு அப்பா!' என்ருன் அவன்.

'என்னே ராசாத்தி என்று எத்தனையோ தடவை நீங்களே சொல்லியிருக்கிறீர்களே: இப்போது ஜமீன்தார் ளிையாகக் குறைத்துவிட்டீர்களே!” என்று அவள் சொல் லும்போது, போடி குறும்புக்காரி' என்று அவன் சொல்வதைவிட வேறு என்ன சொல்ல முடியும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/25&oldid=620427" இலிருந்து மீள்விக்கப்பட்டது