பக்கம்:மூன்று தலைமுறை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 23.

'ஆப்படியானுல் நான் பட்டுப் புடைவை உனக்காக வாங்கித் தரமாட்டே னென்ரு சொல்கிருய்?" . У

“ இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கான் எப்படி உங்களோடு பேசுவேன்? எனக்காகப் பட்டுப் புடைவை எடுப்பது எப்படி? உங்களுக்காக எடுப்பது எப்படி : உங்கள் உடம்பிலே பட்டுப் புரண்ட புடைவையென்ருலே அதன் மகிமை வேறுதான். ஆனல் துரையவர்களிடமும், ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு அவருக்குச் சொக்தம். ஆகவே நீங்கள் உடுத்தும் புடைவையை அவரிடம் கேட்காமல் கொடுத்தால் அவருக் குக் கோபம் வந்தாலும் வரலாம் !' -

" அவர் ஒருவருக்கும் ஒன்றும் கொடுப்பவர் அல்லவா ?” - 'சே, சே ! அப்படிச் சொன்னல் வாய் வெந்துவிடும். கொடுக்கிறதைப் பற்றி யார் சொன்னர்கள் ? உங்கள் உடம்பிலே பட்டதை கான் கேட்கிறேனே, அதற்குச் சொல்ல வங்தேன்.' -

கமலம் உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தாள். முருகாயியின் பேச்சு அவளேக் கிளுகிளுக்க வைத்தது. பேச்சுப் பின்னும் வளர்ந்துகொண்டே சென்றது. அதைக் கேட்கக் கேட்கக் கமலம்மாவுக்குச் சந்தோஷம் பொங்கியது. முருகாயியின் சாதுரியமான பேச்சினலும், அவள் அடிக்கடி ஜமீன்தாரைப் பற்றிச் சொல்லும் :வார்த்தைகளாலும் அவள் மயங்கிப் போள்ை.

'உனக்கு மிகவும் நல்ல புடைவை ஒன்று தருகிறேன்” என்று கமலம் வாக்களித்தாள், . -. புதிசு வேண்டாம்; நீங்கள் கட்டிப் புரட்டியது இருந்தால் போதும்." - -

தெரியும், தெரியும்; நான் கட்டிக் கொண்டதையே தருகிறேன்.” - - - ... . : இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போது ஜமீன்தார் அகஸ்மாத்தாக அந்தப் பக்கம் வந்தார். தாத் திலே கின்று பார்த்தார். பேச்சில் சில பகுதிகள் காதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/28&oldid=620433" இலிருந்து மீள்விக்கப்பட்டது